இடுகைகள்

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - புத்தகவிமர்சனம்

வா.மணிகண்டன் - இணையதளத்தில் மிகவும் பரிச்சயமான பெயர். இவரது வலைப்பூவை முடிந்தவரையில் தினமும் படித்துவிடுவேன். காலையில் அலுவலகம் சென்ற உடன், மின்னஞ்சலை திறந்தால் கண்டிப்பாக இவருடைய புதிய பதிவு இருக்கும். இதை பற்றி தான் எழுதவேண்டும் என்று இல்லை. எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எழுதி கொண்டு இருப்பார். ஒரு மசாலா கலவை மாதிரி - எல்லாமே இருக்கும். ரொம்ப இயல்பான, யதார்த்தமான பேச்சு வழக்கிலேயே இருக்கும். ஒரு சாதாரண மனுஷன் - தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களை சுவாரசியமான எழுத்து வடிவில் கொண்டு வந்துவிடுவார்.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் தினமும் பார்க்கிறேன். ஒரே சொடுக்கில் அந்த புத்தகத்தை வாங்கிவிட முடியும். ஆனால் வாங்கவில்லை. வாங்கவேண்டும் என்று தோன்றவில்லை. "எனக்கு சிறுகதை, நாவல் எல்லாம் பிடிக்காது. சுத்த டைம் வேஸ்ட் " - எனக்கு நானே பல வருடங்களாக சொல்லிக்கொண்டது. வைரமுத்து மட்டும் விதிவிலக்கு. அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் படிச்சிருக்கேன். ஆனால் இந்த வருஷ புத்தக கண்காட்சிக்கு போகும் போத…

சிறுகதை எழுதுவது எப்படி? - புத்தகவிமர்சனம்

சுஜாதாவின் அறிவியல் பற்றிய புத்தகங்களை தவிர வேறு எதுவும் நான் படித்ததில்லை. இது தான் சுஜாதா எழுதி, நான் வாங்கிய முதல் சிறுகதை தொகுப்பு. "சிறுகதை எழுதுவது எப்படி?" - புத்தக தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு நான் வாங்கிய புத்தகம். சிறுகதை எழுதுவதை பற்றிய குறிப்புகள் உள்ள புத்தகம் என்று தான் நினைத்தேன். ஆனால் "சிறுகதை எழுதுவது எப்படி?" என்பது இந்த தொகுப்பில் உள்ள முதல் கதை.

நியாயமாக பார்த்தால், ஏமாற்றத்தில் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் கோபப்பட மறந்துவிட்டேன். நிஜமாக. அத்தனை சுவாரசியம். அந்த கதையில் வரும் ராஜரத்தினம் நானாக இருக்க கூடாதா என்று கூட நினைத்தேன் (என் பொண்டாட்டி இந்த விமர்சனத்தை படிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்). கதை படிப்பது போலில்லாமல், என்னை சுற்றி நடப்பது போல இருந்தது. படித்து முடித்த உடனே, திரும்பவும் அதே கதையை படித்தேன். அதே சுவாரசியம். மொத்த புத்தகத்தையும் ஒன்றரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டேன்.

சுஜாதாவின் கதைகளை பற்றி மற்றவர் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்பொழுது எனக்கே தெரியும். இன்னும் நிறைய சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ண…

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்','கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

நான் கருவாச்சி காவியம் படித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் தமிழ் புத்தகங்கள் படிப்பதற்கான வாய்ப்பும் நேரமும் நெடுநாட்கள் கூடிவரவில்லை. நேரம் கிடைத்தவுடன் நான் கையில் எடுத்த முதல் புத்தகம் - வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.

இது ஒரு குடியானவனின் இதிகாசம்.

பேயத்தேவன் என்றொரு சாதாரண விவசாயியின் வாழ்க்கை தான் இந்த இதிகாசம். மனைவி அழகம்மாள், மகள்கள் செல்லத்தாயி, மின்னலு, மகன் சின்னா, மகவழி பேரன் மொக்கராசு, சிறுவயது காதலி முருகாயி, நண்பர் வண்டிநாயக்கர் - இவர்களை சுற்றி சுழலும் பேயத்தேவனின் கதை.

வைரமுத்து அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் பார்த்த, கேட்ட வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஒரே ஒரு மனிதனின் வாழ்வில் நடப்பதாக எழுதி இருக்கிறார். பிறந்ததில் இருந்து பேயத்தேவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், அவற்றை எதி…

மீண்டும் மலர்ந்தது

முன்னிரவு நேரம் ...
சில்லென்ற மழைச்சாரல் ...
மெலிதான மண்வாசனை ...
தெருவோர மரங்களின் மௌனம் ...
மஞ்சள் வெயில் உமிழும் விளக்குகள் ...

யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காக ஒரு தேநீர் கடை ...

இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச ...

தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச ...

மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக

மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல் !!!

பிடித்திருந்தது ...
புரிந்தது ...

குறிக்கோளின்றி சிலநாள்
இருத்தலும் நலமே !!!

கல்வெட்டுக்கள் - புத்தகவிமர்சனம்

நீங்கள் அலுவல்களை முடித்து விட்டு வீடு திரும்பிகொண்டிருக்கும் ஒரு சாதாரண மாலை நேரம். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது, திடீரென்று வானம் கருக்கிறது. மெலிதாக குளிர்காற்று உங்கள் முகத்தில் அறைந்து செல்கிறது. உங்களை அறியாமல் நீங்கள் கண்களை மூடி, முதல் மழையின் மண்வாசனையை உங்கள் சுவாசப்பைக்குள் சேர்த்து வைக்கிறீர்கள். கண்களை திறந்து பார்க்கும் போது, உங்கள் வீட்டின் எதிரில் உள்ள சாலையோரத்தில் உள்ள புற்களின் மறைவில், பிறந்து பத்து நாட்களே ஆன நாய்க்குட்டிகள் இரண்டு கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கின்றன. திடீரென குழந்தையாகி போகிறீர்கள். பால்ய நினைவுகள் உங்களை ஆக்ரமிக்கின்றன. "சுச்சூ சுச்சூ" என்று சொல்லிக்கொண்டே நாய்க்குட்டிகளை கையில் எடுத்து கொஞ்சுகிறீர்கள். முதலாளியின் திட்டுக்கள், கொடுக்க வேண்டிய கடன் பாக்கி, குழந்தையின் படிப்பு செலவு என அனைத்தும் மறந்து போகின்றன. தெருமுனையில் சொர்க்கத்தை உணருகிறீர்கள்.

இது ஒரு அதியற்புதமான அதே சமயம் மிக சாதரணமான ஒரு நிகிழ்ச்சி. இதை பதிவு செய்வதற்கு உகந்த கருவி எது?. கவிதையா? கட்டுரையா?

கட்டுரை தான் என்கிறார் வைரமுத்து. நானும் வழி…

தமிழகத்தின் மரபுக் கலைகள் ::: புத்தகவிமர்சனம்

எந்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன்பும், அந்த புத்தகத்தின் கடைசி அட்டையில் உள்ள குறிப்புகளை படிப்பது வழக்கம். இப்புத்தகத்தில் இருந்தது இது...

"அவரை நம்பி ஒரு மாடு! வீதிகளை நம்பி ஒரு வேடம்! காலத்தை நம்பி ஒரு கலை! சரியாகச் சொன்னால் பூம்பூம் மாடு ஒரு கலை அல்ல... தொழிலும் அல்ல... யாசகமும் அல்ல... பின் என்னவாம்?. இவை மூன்றின் ஒருங்கிணைப்பு! இரண்டு உயிர்களை முன்னிருத்திப் பல உயிர்களின் பசியாறல்! வாழ்தல்!"

எனக்கு ஒரே குழப்பம். என்னடா, மரபு கலைகள்-னு பேர் வச்சிட்டு பூம்பூம் மாட்ட பத்தி பேசறாரே-னு. புத்தகத்த திறந்து பாத்தப்ப தான் தெரிஞ்சது, தமிழ்நாட்ல இத்தன மரபு கலைகளா-னு.

கலைகள்-னு சொன்ன உடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது பரதநாட்டியம், நாடகம் அல்லது எதாவது ஒரு இசைக்கருவி சம்பந்தப்பட்ட கலை. ஆனா, இதை தவிர, தமிழ்நாட்டில் - நம்ம கிராமங்கள்-ல பல்வேறு விதமான கலைகள் நூற்றுக்கணக்கான வருஷங்களா, மரபுவழி மாறாமல், வாழ்ந்துட்டு வருது. இப்ப கொஞ்ச காலமா, நிறைய கலைகள் அழிஞ்சிட்டும் வருது. அந்த மாதிரி கலைகளை மரபுகலைகள் -னு சொல்றாரு ஆசிரியர்.

மரபுக்கலைகளை இரண்டு விதமாக பகுத்து வைத்திருக்கின்றார்கள்.

ந…

திருநங்கைகள் உலகம் - புத்தகவிமர்சனம்

ஊரோரம் புளியமரம்... உலுப்பிவிட்ட சலசலங்கை... - "பருத்திவீரன்" படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடல் வெற்றி பெறுவதற்கு முக்கியமான "திருநங்கைகளை" பற்றி ஒரு நிமிடம் கூட யோசித்தது கிடையாது. கார்த்திக்கின் நடிப்பும் ஆண்மையும் தான் பேச்சு. எனக்கு தெரிந்த அனைவருமே அப்படித்தான். தவறில்லை. மனித இயல்பு. ஆனால்,தொழில் நிமித்தமாக பெங்களுரு வந்த பிறகு நிறைய திருநங்கைகளை சாலைகளில் பார்த்தேன். நான் பார்த்த அனைவருமே பிச்சை அல்லது பாலியல் தொழிலில் இருப்பவர்கள். இவர்களை புரிந்துக்கொள்ள வேண்டி ஆரம்பித்த தேடுதலில் கிடைத்தது தான் இந்த புத்தகம்.

ஆசிரியர் பால் சுயம்பு, 24 திருநங்கைகளை நேரில் சந்தித்து உரையாடி, அவர்களுடைய வாழ்க்கையை பதிவு செய்து உள்ளார். நம்மிடையே வாழும், ஆனால் நம்மால் அனைத்து விதத்திலும் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகத்தின் பதிவு ஆவணமாக, இந்த புத்தகத்தை கருதுவது சிறப்பு. இவர் சந்தித்த அத்தனை திருநங்கைகளும் இப்பொழுது நல்ல நிலைமையில் உள்ளவர்கள். ஓரிருவரை தவிர, மற்ற அனைவருமே ஒரு கட்டத்தில், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, அரவாணிகளால் ஆதரிக்கப்பட்டவர்கள். ஆனால் …