உன்வலியை நானறிந்து
தன்வலியாய் தானுணர்ந்து
என்னுயிரில் நீ கலந்து
நாம் எழுதிய கவியன்றோ ?.
நீயின்றி நானின்றி
நாமாகி கலந்தபின்
ஊனின்றி உயிரின்றி
நம் காதல் வாழுமன்றோ !.
குலமென்றும் மதமென்றும்
சுற்றமும், சூழும் சனமென்றும்
பழங்கதைகள் பலக்கேட்டு
நின்றிடுமோ நம் காதல் !.
பாடிப்பறந்த பறவையின்
சிறகொடித்ததோ நம் காதல்
ஓடித்திரிந்த மான்குட்டியின்
கால் முறித்ததோ நம் காதல் !.
பட்டுபுழு பட்டாம்பூச்சியாகும் போது
வலிகள் எல்லாம் பறந்திடுமே !..
கணவன் மார்பில் சாய்ந்துறங்கும் போது
ஆயிரம் சிறகுகள் முளைத்திடுமே !..