என் காதல்.

25 ஏப்ரல் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

இறந்தே பிறந்த
குழந்தையை போல் …
முடிந்தே தொடங்கியது
என் காதல் …

காதலின் மறுப்பும் …
குழந்தையின் இழப்பும் …
வாழ்நாள் முழுதும்
தொடரும் நினைப்பும் …

புயலென வந்தாய் …
வேருடன் சாய்த்தாய் …
துளிர்க்கும் நினைப்புடன்
உயிருடன் நான் …

மீனின் கண்ணீர்
கடலுக்கு தெரியுமா …
ஆணின் கண்ணீர்
மனதுக்கு புரியுமா ?…

உயிரை பறித்தால்
சிரிப்புடன் மரிப்பேன் …
நட்பை பறித்தால்
நான் என்ன செய்வேன் ?

அருவியின் உச்சியில் பரிசலாய் …
சரியும் பனியில் சிறுமுயலாய் …
எரியும் குடிசையில் குருடனாய் …
சிங்கள தேசத்தில் தமிழனாய் …
நான் !..

எதிர்மறை எண்ணங்கள்
மனதினில் வந்ததில்லை …
அவை தவிர இப்போது
வேறொன்றும் தோன்றவில்லை …

சித்தம் கலங்கி …
முற்றும் குழம்பி …
தெருவினில் அலையுமுன்
கொன்றுவிடுங்கள் என்னை !!!

கருணைக்கொலை புண்ணியம் !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.