மதுரைக்கு போறேனடி.

19 மே 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

மதுரைக்கு போறேனடி - என்
மாமன்கிட்ட பொண்ணு கேட்க …
அம்மன் கோயில் சாட்சியோட
சீதனமா உன்னை கேட்க !..

ஆயிரங்கால் மண்டபமும்
சாயுங்கால சூரியனும்
வீசுகின்ற தென்றலோடு
பேசுகின்ற மல்லிகையும்
வாழ்கின்ற மதுரையில
வாழ்ந்து வந்த தேவதையை,
கொண்டு போக வரம் கேட்பேன் …
உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன் !…

தூங்காத இரவுகளும்
பொங்கி வரும் கனவுகளும்
பேசாத வார்த்தைகளும்
புரியாத அர்த்தங்களும்
கேட்காமலே கொடுத்தவ நீ …
கொடுத்தவளை கேட்க போகிறேன் !…

நீ போட்ட கோலம் போல
பூப்போட்ட தாவணியில்
அழகழகா சிரிச்சிக்கிட்டு
என் உசுர பறிச்சிக்கிட்டு
நீ பண்ண கொடுமையெல்லாம்
சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட !..

ஜல்லிக்கட்டு காளையை போல்
துள்ளிக்கிட்டு திரிஞ்சாலும்
கண்ணுக்குட்டி உன்னை விட்டு
தள்ளி தள்ளி நிக்குறது
மாமன் சொல்லும் சொல்லுக்காக !…
தமிழ்மதுரை மண்ணுக்காக !…

பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி
பத்திரமா பாத்தாலும்
பத்திக்கிட்டு போகுமின்னு
பக்குவமா சொல்ல போறேன் !..

நெஞ்சுக்குள்ள ஓடி வந்து
கொஞ்சி விட்டு போனவள
சொந்தம் பேச வர போறேன் …
சொந்தக்காரன் ஆகப் போறேன் !..

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.