ஒரு கவிதையின் பயணம்.

18 ஆகஸ்ட் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

கம்பனும் தாமரையும்
பயணித்த பாதை தான் !..
உன் மனமும் என் மனமும்
ஒருமித்த பாதை தான் !..
நீ பேசும் பேச்சுக்கே
பூ பூத்த பாதை தான் !..
செந்தமிழில் நீ பாட
தேன் சுரக்கும் பாதை தான் !..

மழைத்துளிக்கு காத்திருந்தேன்
கவியருவி பொழிகின்றாய் !..
என் உயிர்வலியில் ஒரு துளியை
உணர்வாக புனைவாயோ ?

நிலமெல்லாம் நிலவாக
நீ நடந்து செல்கின்றாய் !..
என் கனவெல்லாம் நனவாக
கவியொன்றை சொல்வாயோ?

உலகில் உள்ள கவிகள் எல்லாம்
ஒன்றாய் கூடி, நன்றாய் பாடி
முயன்று பார்த்து தோற்று போயினர்
உன் கண்கள் பேசிய கவிதைகள் கோடி !..

நீயே கவிதைகள் பாடினால் …

நெடுவனங்கள் சருகாகி
பூவனங்கள் ஆகுமடி …
கொடும்புலியும் பொன்மானும்
காதல் சொல்லி திரியுமடி …

இயற்கையை மாற்றாதே
பூமி இங்கு தாங்காதடி …
காதல் ஒளி கூட்டாதே
சூரியன் மட்டும் போதுமடி …

ஊற்றெடுத்த முதல்கவியில்
சிறகுகள் முளைக்குதடி !..
முற்றுப்புள்ளி வேண்டாமென
இதயங்கள் துடிக்குதடி !..

‐ கவி பாடும் என் தேவதைக்கு !

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.