ரொம்ப அழகா இருக்கு.

14 ஆகஸ்ட் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

தமிழ் அழகா ?
தமிழ் பேசும் இதழ் அழகா ?…

இசை அழகா ?
இசை கொஞ்சும் சிரிப்பழகா ?…

இருள் அழகா ?
இருள் கவிழும் குழல் அழகா ?…

நிலவு அழகா ?
நிலவாய் குளிரும் முகம் அழகா ?…

மேகம் அழகா ?
மேகமாய் மிதக்கும் அவள் தேகம் அழகா ?…

இளமை அழகா ?
இளமையில் இவள் மட்டும் அழகா ?…

உண்மை அழகா ?
உண்மையை மறைக்கும் அவள் கண்மை அழகா ?…

பாவங்கள் அழகா ?
பாவங்கள் செய்யும் அவள் பார்வைகள் அழகா ?…

பருவங்கள் அழகா ?
பருவத்தில் பூரித்த துருவங்கள் அழகா ?…

மர்மங்கள் அழகா ?
மர்மமாய் இருக்கும் அவள் மச்சங்கள் அழகா ?…

முத்தங்கள் அழகா ?
முத்தங்கள் விட்டுச்செல்லும் எச்சங்கள் அழகா ?…

மோகங்கள் அழகா ?
மோகத்தில் எரியும் நம் தேகங்கள் அழகா ?…

தோல்விகள் அழகா ?
தோற்ற பின்னும் சிரிக்கும் வேள்விகள் அழகா ?…

காமங்கள் அழகா ?
காமம் தீர்ந்தும் வாழும் காதல்கள் அழகா ?…

காதல் அழகு !
காதலும் காதலிக்கும் என் காதலி அழகு !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.