தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன்
என் தாயின் கருவறையில்
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன்
உன் காதல் முடிவுரையில் …
தாயும் புறந்தள்ளினாள்
நீயும் புறந்தள்ளினாய்
எலும்புகள் விரியும் ஒலியும்
காதலை பிரியும் வலியும் …
ஒன்றென அறிவேன் கண்மணியே !..
தொப்புள்கொடி அறுத்தாலும்
சொந்தம் விட்டு போவதில்லை
காதலை நீ மறுத்தாலும்
உன்னை நான் பிரிவதில்லை …
உயிரை கொடுத்த அன்னையும்
உணர்வை கொடுத்த உன்னையும்
காலம் முழுதும் மறவேனடி
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி…