கனவோடு கலைபவளே.

9 செப்டம்பர் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

என் மார்பில் படுத்து நீ உறங்க
உன் கூந்தல் கோதி நான் கிறங்க
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல …

காமன் சூத்திரம் முழுதும் விளங்க
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க
காமம் தணிந்தும், காதல் ததும்ப …

நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய
இரவின் முடிவில் என் கனவுகள் கருக
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக …

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது …

கனவோடு கலைபவளே,
என் நிஜத்தோடு கலப்பாயோ ?…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.