மணக்க போகும் பெண்ணுக்கு.

25 செப்டம்பர் 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
படித்துறை மணலில்
பாட்டொன்று படித்தேன் !..

மணக்க போகும் பெண்ணுக்கு
மயங்க வைக்கும் கண்ணுக்கு
மழலை மொழி சொல்லுக்கு
மண வாழ்த்தொன்று வடித்தேன் !..

தேவதையை மணமுடிக்க
தெருவெல்லாம் வெடி வெடிக்க
தொலைதூர நிலவாக
திரிசங்கு ஒலியாக

திருமகன் அங்கு வருவானடி…
திருமகள் உன்னை மணப்பானடி…

கணநேர கள்வனாகி
காதோரம் முத்தமும்
கால்கொலுசு ஓசையில்
காதலின் மொத்தமும்

கணவன் வந்து தருவானடி…
காதல் சொல்லி திரிவானடி…

இருவிழி இமைகளும்
இணைந்தே இமைப்பதும்
இருவரும் ஒன்றாக
இருதயம் துடிப்பதும்

இயற்கை கொடுத்த சந்தமடி…
இருமனம் இணையும் சொந்தமடி…

கோல் ஊன்றும் வயதிலும்
தோள் தாங்கும் விழுதாக
கல்லறை சேரும் வரையிலும்
உனக்கு மட்டும் முழுதாக

மணவாளன் இருப்பானடி - உன்
மனம்போல நடப்பானடி

கண்ணீரை கண்கள் மறந்து போகட்டும்
புன்னகை மட்டுமே பூத்து நிற்கட்டும்
இல்லறத்திற்கு இலக்கணம் இவர்கள் தானென்று
இமயமும் குனிந்து வாழ்த்துக்கள் சொல்லட்டும் !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.