பிரிவென்னும் ஒரு சொல்.

26 டிசம்பர் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பிரிவென்னும் ஒரு சொல்லின், அறியாத பொருளொன்று
உனை பிரிந்த ஒரு நாளில், முழுவதுமாய் புரிந்ததடி …
விழி பேசும் மொழி ஒன்று, சிறுதுளியாய் விழுமென்று
துணை பேச நீயின்றி, தனியாக கண்டேனடி …

நெடுநாட்கள் நான் மறந்த, நிலவோடு பேசுகிறேன்
தொடுவானம் வரை பறந்த, நினைவுகளை யோசிக்கிறேன்
குளிர்தென்றல் எனை தீண்ட, உன் சுவாசம் தேடுகிறேன்
நள்ளிரவில் தனியாக, உன் பெயரை பாடுகிறேன் …

விரல் வரைந்த கோலங்கள், துணி மறந்த நேரங்கள்
போர்வைக்குள் இருவரும் போர் புரிந்த காலங்கள்
எனை வந்து கொல்லுதடி… என்னுயிரை மெல்லுதடி
தாலாட்டு முத்தமின்றி உயிர் பிரிந்து செல்லுதடி …

பனி உறையும் நள்ளிரவும் தனிமையிலே தவிக்குதடி
உன் மூச்சு வெப்பத்தில் குளிர் காய துடிக்குதடி
அதிகாலை சூரியனும் மெதுவாக உதிக்குதடி
நம் வீட்டு ரோஜாக்கள் மொட்டு விட மறுக்குதடி…

சிறு உளியும் மலை பிளக்கும்
சிறு பிரிவும் உயிர் பிளக்கும்
பிரிவுற்று துயரடையா உறவொன்றை தந்து விடு
கடல் சேர்ந்த மழை நீராய் என்னுயிரில் நின்று விடு !…

காத்திருக்கிறேன் காதலுடன் !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.