முதல் காதல்.

5 பிப்ரவரி 2012

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

மலர்கள் பூத்தூவும் மாலையிலே
எதிரில் நீ வந்தாய் சாலையிலே
விழிகள் கண்மூடி திறக்குமுன்னே
நீயென் வாழ்வினிலே !…

கைகள் கோர்த்து நாம் நடப்போமே
தனியாய் நான் மட்டும் பறப்பேனே
மழையில் ஒன்றாக நனைவோமே
குடைகள் இருந்தாலுமே !…

என்னை அறியாமலே
உயிர்க்காதல் உருவானதே
அதை சொல்ல நினைத்தாலுமே
என் பெண்மை தடுமாறுதே !…

முதல் முத்தம் பதியும் நேரம்
உயிர் மொத்தம் உறைந்தே போகும்
விழி சத்தம் கூச்சல் போட்டும்
இதழ் தேகமெங்கும் பரவும் !…

கருவிழியில் நானிட்ட மையும்
மெய்தீண்ட நீ சொன்ன பொய்யும்
இடையருகில் உன் விரல் நகரும்
அந்நேரம் மறந்து போகும் !…

தேகங்கள் சேராமல் மோகங்கள் தீராது
தேடல்கள் இல்லாமல் யூகங்கள் கூடாது
உன் வேகம் பாராமல் என் பெண்மை ஓயாது
மெய்யோடு தீ மூட்ட வா !…

இரவென்றும் விடியாத பகலொன்றை அறியாத
தனித்தீவில் நாம் மட்டும் நிலவுக்கு துணையாக
உன் தோளில் நானாட, என் காதில் நீ பாட
புதுகாதல் செய்வோமே வா !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.