மீண்டும் மலர்ந்தது.

11 டிசம்பர் 2013

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

முன்னிரவு நேரம் …
சில்லென்ற மழைச்சாரல் …
மெலிதான மண்வாசனை …
தெருவோர மரங்களின் மௌனம் …
மஞ்சள் வெயில் உமிழும் விளக்குகள் …

யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காக ஒரு தேநீர் கடை …

இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச …

தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச …

மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக

மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல் !!!

பிடித்திருந்தது …
புரிந்தது …

குறிக்கோளின்றி சிலநாள்
இருத்தலும் நலமே !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.