பிரிவுணர்த்திய தேவதைக்கு.

28 ஜூலை 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

உலகத்தின் மறுபக்கம் நீ இருந்தாலும்
உன் இதயத்தின் ஒருப்பக்கம் நான் இருப்பேனே !…
கடல்கள் பல நீ கடந்து சென்றாலும்
கனவினில் இருவரும் கலந்திருப்போமே !…

காணும் பெண்ணெல்லாம் உன் போல தோன்ற
காண்பவை நிஜமாக நான் அங்கு வேண்ட
கண்ணில் பிழையோ, காட்சிப் பிழையோ
கண்மணி உன்னால் காதல் மழையோ !…

இரவின் தனிமையை நினைவுகள் வதைக்க
இமைகள் இணைந்தாலும் நீயங்கு இனிக்க
கைப்பிடித்த நினைவுகள் கனவினில் மிதக்க
கண் பனித்த துளிகள் தலையணை நனைக்க …

சேலைகளை அழகாக்கும்
நந்தவனச் சோலையே !…
செந்தமிழ்நாட்டில் எனை விட்டு
சென்றதென்ன மேலையிலே !…

கவிதைத் தாயின் மடியிலே
கண்ணன் தேடிய பூங்குழலே
புன்னகை பூத்து உனை வெல்ல
பூக்களும் இல்லை பூமியிலே !…

உன் தேகம் வீசும் வியர்வை வாசம் !
உன் கண்கள் கனிவுடன் பேசும் நேசம் !
என் ஊனுடன் உயிர் கலந்திருக்கும் வரை
ஒவ்வொரு நொடியும் தேடும் உன் ஸ்பரிசம்!…

நட்புடன் சிரித்து, மகிழ்ந்த பொழுதுகள் …
கவலையை பகிர்ந்து, நெகிழ்ந்த நிமிடங்கள் …
ஒரு துளி ரகசியம் ஏதுமின்றி
மனதை இருவரும் திறந்த தருணங்கள் …

மீண்டும் வேண்டும் கண்மணியே!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.