தேசபற்று.

24 பிப்ரவரி 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

என் தாயின் கருவறையில்
கோடுகள் கிழித்து ரணமாக்கிவிட்டு
பெயர் வைத்தார்கள் …
தேசபற்று !!!

பெற்ற குழந்தை பசியில் அழும்போதும்
காவல் நாய்க்கு சோற்றை வைக்கும் கடமை
தேசபற்று !!!

மொத்தமும் நமக்காக இருக்கும்போது
மிச்சதுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்
தேசபற்று !!!

ஒன்றாய் இருந்தோம் கருவறையில்
கிழித்து பிறந்தோம் விடுதலையில்
தாயின் இரத்தம் கணக்கில் இல்லை
பிள்ளைகளின் யுத்தம் முடியவில்லை

ஆயுதங்களாய் அழியும் செல்வத்தில்
பூமியில் சொர்க்கங்கள் படைக்கலாம் …
குருதி சிந்தும் யுத்தங்களை
அன்பு சிந்தும் முத்தங்களாக்கலாம் …

இரத்தம் தோய்ந்த எல்லைகோடுகளில்
பூக்காடுகள் வளர்ப்போம் !
துப்பாக்கி சுமக்கும் இயந்திரங்களை
மனிதர்கள் ஆக்குவோம் !

தேசங்களை துறப்போம், நேசங்களை வளர்ப்போம்
எல்லைகளை மறப்போம், விண்ணுலகில் பறப்போம்
புதிய உலகம் உருவாக, பிரளயங்கள் தேவையில்லை
தேசங்கள் தாண்டி காதல் செய்வோம் !…

நான் தமிழனல்ல
நான் இந்தியனல்ல
பட்டங்களை துறந்து
பாடி திரியும் பறவை நான் !..

என்னோடு வாருங்கள் …

பறந்து திரியலாம்
சிரித்து மகிழலாம்
ஆனந்தமாய் வாழலாம்
நிம்மதியாய் இறக்கலாம் !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.