இது தான் காதலா?

13 பிப்ரவரி 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

புகைத்ததுண்டு… புகைப்படத்துடன் பேசியதில்லை …!
நகைத்ததுண்டு… நடுவீதியில் தனியாக இல்லை …!
நடித்ததுண்டு … நட்பினிடத்தில் என்றுமில்லை …!
வெடித்ததுண்டு… வெட்டுப்பட்டு வந்ததில்லை …!

சிந்திக்காமல் சிரித்ததுண்டு …
சிரித்துக்கொண்டே அழுததில்லை …!

பேசிக்கொண்டே இருந்ததுண்டு …
மௌனமொழி விளித்ததில்லை…!

விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு …
உறங்கமுடியாமல் விழித்ததில்லை …!

பார்க்காமல் பழகியதுண்டு …
பழகியபின் தவிர்த்ததில்லை …!

இது தான் காதலா?

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.