பூக்கள்.

15 அக்டோபர் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பூக்கள் சிரித்து முத்தமிடும்
பூக்கள் மெலிதாய் சத்தமிடும்
பூக்கள் காதலில் உளரும்
பூக்கள் மோதலில் அலறும

பூக்கள் கொதித்து எரியும்
பூக்கள் வெடித்து சிதறும்
பூக்கள் சிவந்து குளிரும்
பூக்கள் குளிர்ந்து மலரும்

பூக்கள் மீண்டும் சிரிக்கும் !…

பூக்களின் சாயத்தை
நடுசாமத்தில் வெளுத்தவளே …
காமத்தின் ஆழத்தை
கண்மூடி காட்டியவளே …

நரம்பெல்லாம் புடைக்க
தசையெல்லாம் இறுக்க
உடம்புக்குள் வெடிக்க
மூச்சங்கு அடைக்க
உயிருக்குள் வலிக்க
உதடுகள் சிரிக்க …

நானறிந்த வித்தையின்
நானறியா பக்கத்தில்
நாம் எழுதிய ஓர் கவிதை
நாளும் சொல்லும் நம் உறவை !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.