போதை தரும் பேதையா?

31 மார்ச் 2019

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

போதை தரும் பேதையா?
பேதை தரும் போதையா?
எதை தொட, எதை விட?
விட்டுவிடாமல் தொடவா?
தொட்டுவிடாமல் விடவா?

நெஞ்சமா மஞ்சமா?
கொஞ்சும் விழி மிஞ்சுமா?
கண்டதென்ன கொஞ்சமா?
காணாதெல்லாம் நஞ்சமா?

அடியெடுக்கும் அரும்பே
குடிகெடுக்கும் குறும்பே
பகையறுக்கும் பறம்பே
உயிருருக்கும் உரும்பே

என்னுயிரோலம் கேளாயோ?

ஆடித்தான் போகிறேன்
அளவெடுத்த முன்னழகில்
தேடித்தான் வேர்க்கிறேன்
தென்படாத இடையழகில்

தொடத்தான் துடிக்கிறேன்
தவிலொத்த பின்னழகை
விடத்தான் மறுக்கிறேன்
திமிரெடுத்த பேரழகை

பெயரென்ன, மொழியென்ன
நான் வாழ்ந்த வழியென்ன?
மறந்தொழிந்த பொழுதின்று
புகழழிக்கும் இரவின்று …

பொருள் விளக்கம்:
பறம்பு - பாரி மன்னன் ஆண்ட மலை/நாடு
உரும்பு - கொதிப்பு

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.