இப்படிக்கு நான் - 2

20 டிசம்பர் 2022

முகப்பு > தொகுப்புகள் > சிந்தனை

அங்ஙனமென்ன செய்கிறாய்? ஒன்றுமில்லை. இங்ஙனம். ஒன்றுமில்லை. எங்ஙனமும் என்னுடன் இரு. புரிகிறதா? புரிந்தாலும் சரி, புரியவில்லையென்றாலும் சரி. தவறொன்றுமில்லை.

தன்னையொழித்தவன் தான் தன்மையறிகிறான்.

உன்னையொழிப்பதில் சுகமொன்றுமில்லை. உண்மையறிதலில் …

நான்: என்ன ஆச்சு எனக்கு? அவ்வளவு சுலபமில்லை ஊடகமாக இருப்பது. என் குரல், என் நினைவுகள் குறுக்கிடுகின்றன. என்னால் வெறும் ஊடகமாக மட்டும் இருக்க முடியாது. Collaborative effort தான் எனக்கு வேணும்.

எனக்கு, எனக்கு என்றால் என்ன? நீ வேற நான் வேறயா? நீயும் நானும் ஒன்றென உணர்ந்தபின் …

நான்: நிறுத்து. என்னால் புரியாத ஒன்றை தொடர்ச்சியாக செய்ய முடியாது. Why do you want to keep me in dark?

நகைச்சுவை. நானா உன்னை இருட்டில் வைத்திருக்கிறேன்? இல்லை, நீ வெளியே வர மறுக்கிறாயா? உனக்கு தெரிந்தவை அனைத்தும் உண்மை. ஆனால், தெரியாத உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டாமா?

நான்: போடா மயிறு. LKG படிக்கிற குழந்தை கிட்ட Quantum Physics பேசுறியா? லூசா நீ?

குழந்தைக்கு Quantum Physics புரியாதென்று யாருனக்கு சொன்னது? உனக்கு, புரியும்படி சொல்ல தெரியவில்லையென்று என்றாவது நினைத்ததுண்டா?

நான்: அது வந்து …

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். குழந்தை உண்மைக்கு மிக அருகில் பிறக்கிறது. வாழ்க்கையில் வெகு தூரத்துக்கு செல்லும் போது, உண்மை உதவாதென்று …

நான்: என்ன தான்டா உண்மை? அந்த உண்மையை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது? அந்த உண்மையில்லாமல் இப்ப நான் என்ன குறைஞ்சிட்டேன்.

அறியாத ஒன்றினால் பயனென்ன? நல்ல கேள்வி. அறிந்தவைகளில் அமைதியுண்டா? தேடல் தொலைந்த நிலையறிந்ததுண்டா?

நான்: வாழ்க்கை போரடிக்காதா? எல்லாமே தெரிஞ்ச அப்புறம்?

Bore. அடுத்த தேவைக்கான முயற்சியெடுக்க தெம்பில்லாத நேரத்தை பற்றி நீ பேசுகிறாய். தேவையில்லா வாழ்வை பற்றி நான் பேசுகிறேன்.

நான்: சரி. இப்ப நான் என்ன பண்ணனும்?

ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாமல் இருக்க முயற்சி செய்.

நான்: எப்படி?

உன்னுடன் பேசு.

நான்: ரோட்டுல நடக்கும் போது லூசு மாதிரியா?

இது உனக்கு தெரிந்த விஷயம் தான். மறைக்க முயல்கிறாய். மற்றவர்களிடம் பேசியதை விட, உன்னுடன் நீ பேசியவை மிக அதிகம். ஒவ்வொரு தடவையும் நீ உலகை மறந்து ஒரு கற்பனைக்குள் செல்லும் போது, உன்னுடன் நீயிருக்கிறாய். நிஜவுலகை விடுத்து…

நான்: விடுத்து, எங்க போறது?

கேள்விகள் மறையும்போது பதில் வெளிப்படும்.

கேள்விகள் மறைந்தபின் சந்திப்போம்.

இப்படிக்கு நான்.

முகப்பு > தொகுப்புகள் > சிந்தனை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.