என் பெயர். உன் குரல்.

26 பிப்ரவரி 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

கோடி முறை கேட்டிருப்பேன்
என் பெயரை …
இன்று மட்டும் இனிக்குதே !…

புன்னகை பூக்கும் பூவிதழில்
என் பெயரும் பூத்ததே !…

இன்னொரு முறை சொல்லாதே
எறும்புகள் என்னை மொய்க்கின்றன !…

அவள் உஷ்ணத்தை உணராமல்
குழலை நுகராமல்
இதழை வருடாமல்
செவிக்கு மட்டும் அதிர்ஷ்டம் !..

தொலைபேசி ஒழியட்டும் !..
அறிவியல் அழியட்டும் !..

யுகம் யுகமாய் காத்திருந்து
பிறந்தது மனித இனம் …
தினம் தினமாய் காத்திருந்து
கேட்கிறது என் மனம் …

என்னாகுமோ !..

மறுக்கும் சொல்லில் உன் காதல்
மறுக்க முடியாமல் தவிக்குதே !..
இனிக்க கேட்ட உன் குரல்
மீண்டும் மீண்டும் ஒலிக்குதே !..

கவிக்கு சொந்தக்காரி
கவிதையை படித்ததால்
கவிஞன் மனதில்
இன்னொரு கவிதை !

நேற்றைய கவிதை தகித்தது !
இன்றைய கவிதை இனிக்குது !
நாளைக்கும் கவிதை பூக்குமோ ?
கவியின் குரல் உனக்கு கேட்குமோ ?

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.