எனக்கு நானெழுதும் கடிதம்

19 ஜனவரி 2023

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

உன்னுடன் பேசு
நிறைய பேசு
சத்தம் போட்டு பேசு
கேட்பவர்களை கவனியாதே
பேச்சு உனக்காக

பேசிக்கொண்டேயிரு
வார்த்தைகள் தீரும்வரை
எஞ்சிருப்பது நீ மட்டும்
மௌனமாய், மோனமாய்

உணர்ந்துக்கொள்வாய்…

உண்மையென ஒன்றுமில்லை
உண்மையில் ஒன்றுமில்லை
உணரத்தெரிந்தால் வாழ்வதெளிது
அலை மேல் இறகு !

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.