வெயில் தின்ற மழை - புத்தகவிமர்சனம்.

24 ஜனவரி 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

நிலாரசிகனுடைய கவிதைகளை அவ்வபோது இணையதளங்களில் படித்து இருக்கிறேன். “காதல்” பற்றிய கவிதைகள் மிக அருமையாக இருக்கும். தற்போது கணினி துறையில் வேலை செய்யும் இவரது நான்காவது புத்தகம் “வெயில் தின்ற மழை”. நிலாரசிகனை நான் படித்த முதல் புத்தகம். நான் படிக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது கவிதை தொகுப்பு இது.

வழக்கமாக கவிதை புத்தகங்களை படித்து முடித்தவுடன், என் மனதில் கவிதைகள் மூன்று பிரிவுகளில் சென்று பதியும்.

௧. மிகவும் பிடித்தவை
௨. சுமாரானவை
௩. இதையெல்லாம் யார் கவிதை புத்தகத்தில் சேர்த்தது?

அனால், நிலாரசிகனின் நவீன கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” சற்று வித்தியாசமாக இருந்தது.

௧. புரிந்தது
௨. புரியாதது

புரிந்தவை அனைத்தும் பிடித்து போனது. புரியாதவை புதிராய் போனது. சின்னச் சின்ன கவிதைகள் எழுதி, நானும் கவிஞன் என்று நினைத்து பெருமை கொண்டிருந்த என்னை யோசிக்க வைத்துள்ளது. மற்றவர் கவிதையை படித்து, அதன் கருத்தை முழுமையாய் உள்வாங்கி அனுபவிக்க தெரியும் போது தான் ரசிகன் முழுமை பெறுகிறானா? அல்லது, செந்தமிழ் சொற்கள் மீதேறி அவனையும் அறியாமல், ரசிகனுடைய இதயத்தில் சிம்மாசனமிட்டு அமரும் போது, கவிஞன் முழுமை பெறுகிறானா?

சர்ச்சைக்குரிய கேள்வி.

தனிமை, நிசப்தம், இரவு, மழை, வலி, மரணம் - என்று நீளும் இவரது கவிதைகளை படிக்கும் போது, இவர் எப்படிப்பட்டவர் என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. இவரே ஒரு கவிதையில் மிக அற்புதமாக சொல்கிறார்.

நான்கு சுவர்களுக்குள்
சுற்றி சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டு சென்ற இறகு
நான் !.

எத்தனை முறை படித்து இருப்பேன். கணக்கு வைக்கவில்லை. இந்த கவிதையை படித்தபிறகு, மீண்டும் ஒரு முறை முழு புத்தகத்தையும் படித்தேன் :) நிறைய கவிதை புத்தகங்களை படிக்கவேண்டுமென முடிவெடுத்து இருக்கிறேன்.

இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தவை சில:

௧. இதழ் உதிர்க்கும் பழகிய
௨. பாசிகள் படர்ந்த குளக்கரையில்
௩. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த
௪. என்னைச் சுற்றிய
௫. பெயரிடப்படாத மௌனத்தின்
௬. காற்று புகாத கண்ணாடி சுவரின்
௭. முதலில் அது நத்தை என்றே
௮. தெருநாய்களின் நககீறல்களால்
௯.சிறுவனின் மணல வீட்டை
௰. காயப்படுத்துவதற்கேன்றே

இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நீங்களே முழு புத்தகத்தையும் படித்து பாருங்கள்.

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.