சிறுகதை எழுதுவது எப்படி? - புத்தகவிமர்சனம்.

26 ஜனவரி 2015

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

சுஜாதாவின் அறிவியல் பற்றிய புத்தகங்களை தவிர வேறு எதுவும் நான் படித்ததில்லை. இது தான் சுஜாதா எழுதி, நான் வாங்கிய முதல் சிறுகதை தொகுப்பு. “சிறுகதை எழுதுவது எப்படி?” - புத்தக தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு நான் வாங்கிய புத்தகம். சிறுகதை எழுதுவதை பற்றிய குறிப்புகள் உள்ள புத்தகம் என்று தான் நினைத்தேன். ஆனால் “சிறுகதை எழுதுவது எப்படி?” என்பது இந்த தொகுப்பில் உள்ள முதல் கதை.

நியாயமாக பார்த்தால், ஏமாற்றத்தில் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் கோபப்பட மறந்துவிட்டேன். நிஜமாக. அத்தனை சுவாரசியம். அந்த கதையில் வரும் ராஜரத்தினம் நானாக இருக்க கூடாதா என்று கூட நினைத்தேன் (என் பொண்டாட்டி இந்த விமர்சனத்தை படிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்). கதை படிப்பது போலில்லாமல், என்னை சுற்றி நடப்பது போல இருந்தது. படித்து முடித்த உடனே, திரும்பவும் அதே கதையை படித்தேன். அதே சுவாரசியம். மொத்த புத்தகத்தையும் ஒன்றரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டேன்.

சுஜாதாவின் கதைகளை பற்றி மற்றவர் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்பொழுது எனக்கே தெரியும். இன்னும் நிறைய சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ணி இருக்கிறேன். எனக்கும் சிறுகதைகள் எழுதவேண்டும் போலிருக்கிறது. நேரம் அமையும் போது எழுதுவேன். நன்றி சுஜாதா !!!.

இது சுஜாதா எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு ரகம். முக்கால்வாசி கதைகளில் பிராமண பாஷையின் நெடி தூக்கல். எல்லா கதைகளையும் பற்றி இங்கு எழுதி உங்கள் சுவாரசியத்தை குறைக்க விரும்பவில்லை. நீங்களே படியுங்கள். எனக்கு முகவும் பிடித்த கதைகள் இவை.

  1. சிறுகதை எழுதுவது எப்படி? - ஒரு பரவச அனுபவம்
  2. எல்டொராடோ - தந்தை மகனின் பாசம்
  3. அம்மா மண்டபம் - ரங்கநாதர் vs கார்ல் மார்க்ஸ்
  4. ஒரே இரவில் - அருமையான அறிவியல் புலனாய்வு கதை
  5. கால்கள் - முற்பகல் செய்யின்
முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.