நியான் நகரம் - புத்தகவிமர்சனம்.

21 ஜூலை 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

“வீழ்வது இழிவாகா !… வீழ்ந்து கிடப்பதே இழிவு !…“

நியான் நகரம் - கதைக்கு இசை சேர்த்து புதுமை படைத்த “ரணம் சுகம்” வரிசையில், “பாதை” குழுவிடமிருந்து இன்னொரு படைப்பு. முந்தைய நாவலின் வெற்றியை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்திருகிறது. ஒரு உண்மை கதையின் தழுவல். விவரங்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

ரணம் சுகத்தில் இருந்து ஒரு சின்ன வித்தியாசம். நாவலின் முக்கியமான உரையாடல்களையும் பாடல்களுடன் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள். இது புக்கிசைக்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை. திரைப்படங்களை விட நாவல்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிவதற்கு முக்கிய காரணம் - படிப்பவர்கள் மனத்திரையில் விரிவது முழுவதும் அவர்களுடைய கற்பனை. அவர்கள் தான் அத்திரைப்படத்தின் இயக்குனர்கள். இங்கு பேச்சுக்கள் பதிவு செய்யப்படும் போது, அந்த கற்பனை தடைபடுகிறது.

வினய்-கும் சத்யனுக்கும் நடக்கும் உரையாடல் தான் நாவலின் முதல் பக்கம். பதிவு செய்யப்பட்ட பேச்சில் அந்த வீச்சு இல்லை. சத்யனின் பேச்சில் அந்த கம்பீரம், மிதப்பு இல்லை. மது-வுடன் நடக்கும் முக்கியமான உரையாடலில், வினய்-இன் பேச்சில் சரியான ஏற்ற இறக்கங்கள் இல்லை. மது நன்றாக பேசி இருக்கிறாள். சோதனை முயற்சியாக கருதி அடுத்த படைப்புகளில் உரையாடல்களை தவிர்க்கலாம். இது என்னுடைய கருத்து.

அழகான கருவிசையுடன் (theme music) ஆரம்பிக்கிறது நாவல்.

“நிலவுடன் நான் வரும் நகர்வலம்” - மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கலாம். அருமையான துள்ளலான இசை. கதையில் சரியான இடத்தில், அழகாக!

“குறைய குறைய நிரப்புகவே” - இதம்.

“ஆண்டிபட்டி அரசம்பட்டி” - சரியான குத்து !

பல பாடல்களின் வரிகள் மிக மிக அருமை.

என்னை சுட்டு போகும் தீயில்
நான் சுகமே காண்கின்றேன்
உன் மெட்டு போடும் விழில்
ஏனோ ஏனோ தொலைகின்றேன்சில பல பூக்கள் வேண்டாம், பூந்தோட்டம் வாங்கித்தா
கை முத்தம் போதாதே, இதழ் முத்தம் கோடி தா
புதுக்கவிதைகள் பத்தாதே, முழு காவியம் எழுதி தா
சந்தேகம் வைக்காதே, பரிசுத்த காதல் தா !…இமைகள் பாரு அழுதது தெரியும்
இரவை கேளு தவித்தது சொல்லும்
இதயம் அறுத்தால் உண்மை புரியும்
இறந்து போகும் முன் ஒரு முறை பேசு !ஆனால், இசை ஏனோ மனதை உடனே தொடவில்லை. ரணம் சுகத்தில் அத்தனை பாடல்களும் கேட்ட உடனே பிடித்தது. நியான் நகரம் - தனுஷ் போல என்று நினைக்கிறன். கேட்ட உடனே பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்குமோ?

கதையை பற்றி விமர்சனத்தில் சொல்லி சுவாரசியத்தை குறைக்க விரும்பவில்லை. நீங்களே வாங்கி படியுங்கள். இசையில் புதுமுயற்சிகள் மேற்கொள்ளும் பாதை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.