பிஸினஸ் மகா மகா ராஜாக்கள் - புத்தகவிமர்சனம்.

8 பிப்ரவரி 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

குமுதம் இதழில் “பிசினஸ் மகா மகா ராஜாக்கள்” என்ற தொடர் வெளிவந்து மக்களுடைய வரவேற்பை பெற்றது.ஒவ்வொரு வாரமும் ஒரு கோடீஸ்வரர் பற்றி ஆசிரியர் ரஞ்சன் எழுதுவார்.அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதித்தார், எப்படி சம்பாதித்தார், எந்த நிலையிலிருந்து ஆரம்பித்தார், என்னென்ன முயற்சிகள் செய்தார்,சந்தித்த முக்கியமான தோல்விகள் என அவர்களது பல வருட வாழ்க்கையை மூன்று பக்கங்களுக்குள் சொல்லிவிடுகிறார். 31 வாரங்கள் வெளிவந்த தொடர், இந்த புத்தகமாக 2004-ம் ஆண்டு வெளிவந்தது. இப்போது தான் என் கைக்கு வந்தது.

கர்சன்பாய் பட்டேல் முதல் வாரன் பப்பெட் வரை 31 செல்வந்தர்களின் முக்கிய குறிப்புகள் அடங்கிய இந்த புத்தகத்தில், ஒரு பெண் செல்வந்தர் கூட இடம் பெறவில்லை. கோடீஸ்வரிகள் உலகத்தில் இல்லையா அல்லது இந்த புத்தகத்தில் இருந்து தவிர்க்கப்பட்டர்களா?. இணையத்தில் தேடி பார்த்தேன். வின்பிரே ஒபரா (Oprah Winfrey) தவிர பேர் சொல்லும்படி புகழ் பெற்றவர்கள் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பேர். ஒரு புள்ளிவிவரம், பெண் செல்வந்தர்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தில் 40% அதிகரித்து இருபதாக சொல்கிறது. ரொம்ப சந்தோசம்.

லாட்டரி, புதையல் போன்றவற்றில் இறங்காமல், உழைத்து முன்னேறி, கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்கிற ஆசையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். இங்கு சொல்லப்பட்டு இருப்பவர்களில் பெரும்பாலானோர், அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டபட்டவர்கள். அவர்களே கோடீஸ்வரர்கள் ஆகும் போது, “நம்மால் முடியாதா?” என்ற கேள்வியும், “முடியும்” என்ற பதிலும் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

இந்த புத்தகத்தில் இருக்கும் பல கோடீஸ்வரர்கள் பற்றிய சில தகவல்கள் ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருக்கும். நீங்களே படித்து பாருங்கள். இதிலிருந்து எனக்கு பிடித்த, என் மனதை கவர்ந்த 10 கோடீஸ்வரர்கள் இதோ…

௧. அம்பானி (Dhirajlal Hirachand Ambani - Reliance Industries)
௨. கர்சன்பாய் பட்டேல் (Dr. Karsanbhai Khodidas Patel - Nirma group)
௩. ரிச்சர்ட் ப்ரோன்சன் (Sir Richard Charles Nicholas Branson - Virgin Group)
௪. சாம் வால்டன் (Samuel Moore “Sam” Walton - Wal-Mart)
௫. வாரன் பப்பெட் (Warren Edward Buffett - Berkshire Hathaway)
௬. ஸ்டீவ் ஜாப்ஸ் (Steven Paul Jobs - Apple)
௭. பில் கேட்ஸ் (William Henry “Bill” Gates III - Microsoft)
௮. வால்ட் டிஸ்னி (Walter Elias “Walt” Disney - The Walt Disney Company)
௯. ஆண்ட்ரூவ் க்ரோவ் (Andrew Grove - Intel Corporation)
௰. ரே குரோக் (Raymond Albert “Ray” Kroc - McDonald’s Corporation)

பி.கு. 2010-ம் ஆண்டு உலகின் முதல் கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (Carlos Slim Helú - the chairman and CEO of Telmex, América Móvil).

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.