இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்','கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

நான் கருவாச்சி காவியம் படித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் தமிழ் புத்தகங்கள் படிப்பதற்கான வாய்ப்பும் நேரமும் நெடுநாட்கள் கூடிவரவில்லை. நேரம் கிடைத்தவுடன் நான் கையில் எடுத்த முதல் புத்தகம் - வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.

இது ஒரு குடியானவனின் இதிகாசம்.

பேயத்தேவன் என்றொரு சாதாரண விவசாயியின் வாழ்க்கை தான் இந்த இதிகாசம். மனைவி அழகம்மாள், மகள்கள் செல்லத்தாயி, மின்னலு, மகன் சின்னா, மகவழி பேரன் மொக்கராசு, சிறுவயது காதலி முருகாயி, நண்பர் வண்டிநாயக்கர் - இவர்களை சுற்றி சுழலும் பேயத்தேவனின் கதை.

வைரமுத்து அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் பார்த்த, கேட்ட வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஒரே ஒரு மனிதனின் வாழ்வில் நடப்பதாக எழுதி இருக்கிறார். பிறந்ததில் இருந்து பேயத்தேவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், அவற்றை எதி…