தேவதையே... தேவதையே...

வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன
என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன
காதோரம் உன் மூச்சுக்காற்று சூடேற்றும் வேகமென்ன
அணிதிரண்ட உன்பெண்மை அநியாயம் செய்வதென்ன !...

இதழோடு இதழ் சேர்த்து உணவை நான் ஊட்டுவேன்
மடிமீது தலைசாய்த்து தினமும் தாலாட்டுவேன்
நாவால் உன் மேனியில் ஓவியம் பல தீட்டுவேன்
வள்ளுவனின் மூன்றாம் பாலை துளித்துளியாய் ஊற்றுவேன் !...

அணைத்தவுடன் எரியும் அதிசயம் உன் தேகமோ
நினைத்தவுடன் உருகும் புதுசுகம் தான் மோகமோ
என் காதல் நரம்புகளில் சிறுத்தையின் வேகமோ
செங்காந்தள் பூச்சூடிய பெண்மேனி தாங்குமோ !...

பல கோடி மின்னல்கள் எனை வந்து தாக்குதடி
உன்னுயிரில் நான் இணையும் அந்தவொரு நொடியிலே !...
சில நூறு ஜென்மங்கள் நான் வாழ்ந்து முடிக்கிறேன்
மார்போடு நீ சிணுங்கும் நள்ளிரவு வேளையிலே !...

மன்மத வெள்ளம் உன்னிடம் செல்லும்
உன்னத நேரம் நம் விழியோரம்
மோகத்தின் பேய்மழை மூர்க்கமாய் பெய்தும்
முடிக்கின்ற வேளையில் சாரலாய் காதல் !...

...
...
...

தேவதையே... தேவதையே...
தேன் சுரக்கும் பூவிதழே...
உன் தாய் சுமந்த தேகமதை
நான் சுமக்கும் காலம் எது ?...

கருத்துகள்

 1. செமையா எழுதியிருக்கீங்க பாஸ்

  தற்செயலாக சில நல்ல கவிஞர்களை தமிழ்மணம் அறிமுகப்படுத்துவதுண்டு இன்றைக்கு நீங்கள்

  பதிலளிநீக்கு
 2. அழகான வரிகள்.. கொடுத்து வச்ச பொண்ணு .. ரொம்ப அழகா இருக்கு பிரேம்.. :) :) :)

  பதிலளிநீக்கு
 3. //வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன
  என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன//என்ன ஒரு கற்பனை கலக்கிட்டிங்க போங்க அருமை அன்பரே !

  பதிலளிநீக்கு
 4. கவிதை தோரணை, கவர்ந்திலுக்கும் வரிகள், காதல் மோகத்தின் சாறல் ஒவ்வொரு வரிகளிலும்
  ஆனந்தக் கூத்தாடுதே. அற்புதம் பிரேம்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?