போகாதீங்க மாமா !...

பஞ்சு மெத்தை தலைகாணி
பன்னீர் தெளிச்சு வச்சாலும்
பாவிமக கண்ணுக்குள்ள
தூக்கம் மட்டும் இல்ல மாமா !...

கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன்
தனியா என்னை தவிக்க விட்டு
தூரதேசம் போனதேன் மாமா !...

பொறையேறி விக்கும் போதும்
கண்ணு கலங்கி நிக்கும் போதும்
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா !...
உன்னோட நெனைப்பு மாமா !...

மல்லிப்பூவு வாசம் உனக்கு
மனசு பூரா புடிக்குமுன்னு
குண்டுமல்லி பூவச்சூடி
பூவப் போல இருக்கேன் மாமா !...

லவுக்கை இல்லா மாராப்பு
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு
கந்தாங்கி சீலை கட்டி
கச்சிதமா இருக்கேன் மாமா !...

குட்டி குட்டி ஆசையெல்லாம்
எட்டி எட்டி பாக்குது மாமா !...
எட்டு வாளி தண்ணி இறைச்சும்
காய்ச்சல் மட்டும் போகல மாமா !...

நேந்துவிட்ட காளையெல்லாம்
மீசை வளர்த்து சுத்துது மாமா !...
நீயில்லாத சாமத்துல
வீட்டுக் கதவ தட்டுது மாமா !...

வாடாமல்லி வாடுமுன்ன
வண்டி வச்சி வந்துடு மாமா !...
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும்
என்னை விட்டு போகாதீங்க மாமா !...

கருத்துகள்

 1. கவிதையில் பெண்களின் சோகத்தை அழகாக விவரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பா!

  பதிலளிநீக்கு
 2. ஆறாம ஆத்தி வச்சேன்
  உனக்குள்ள பூக்க வச்சேன்
  அம்புட்டும் புடிச்சிருந்தும்
  தள்ளி நிற்பதென்ன மாமா !...

  மாமா-னு கூப்பிட சொல்லி
  மனச பூரா கொடுத்துப்புட்டு
  மாமாங்கமா நிக்குற
  காரணத்த சொல்லு மாமா !...

  கைய புடிச்சி கூட நடக்க
  கூட படுத்து புள்ள பொறக்க
  நெடு நாளா ஆச மாமா !...
  காது குடுத்து கேளு மாமா !...

  உனக்கு என்னை புடிக்குமுன்னு
  ஊரு முழுக்க பேச்சு மாமா !...
  உண்மையின்னு சொல்ல மாட்டேன்
  பொத்தி வச்ச ஆச மாமா !...

  பதிலளிநீக்கு
 3. ஆகா அருமையான உணர்வின் வெளிப்பாடு கவிதை வரிகளில் எந்த சலனமும் இன்றி ஒரு பெண்ணின்
  மனதை கண்முன் நிறுத்திய கவிதை இது .கவிதையில் அதிகம் மண்வாசனை நிறைந்துள்ளது .வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறப்பாகத் தொடரட்டும் .எனக்கும்
  கவிதை என்றால் உயிர் .முடிந்தால் வாருங்கள் உங்கள் கருத்தினைத் தாருங்கள் சகோ .இது என் பணிவன்பான வேண்டுகோள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...............

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப நன்றி சகோ... கண்டிப்பா உங்க கவிதைகளை படிக்கறேன்..

  பதிலளிநீக்கு
 5. என்ன நடகுது மாமா ....
  இங்க என்ன நடகுது மாமா ???
  அந்த மாமி இந்த மாமாவ தான் நினைக்குராங்காலா மாமா !!!

  மாமா மாமா சொல்லுங்க மாமா .!.!.!.!.!

  பதிலளிநீக்கு
 6. he he he he :)
  just enjoy the poem guys... why do you want to dig further?

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?