தொண்ணூறு வயசுல !...

தொண்ணூறு வயசுல
தடி ஊணி நடக்கறப்ப கூட,
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் ...
என் பாட்ட அவ ரசிக்கணும் ...

கையோட கை சேர்த்து
மடி மேல தலை சாய்ச்சி,
அவ கண்ண பாக்கறப்ப
முப்பது வயசுல மொளைச்ச காதல்
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும் ...

காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் ...

சுருக்கம் விழுந்த கையால
இறுக்கமா அவளை புடிச்சி
நெருக்கமா பக்கம் வந்தாலும்
வெட்கத்துல அவ விலகி போகணும் ...

ஓரக்கண்ணால அவ வெட்கத்த
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு,
அந்த காதோர மச்சத்துக்கு
கம்பனா நான் மாறனும் ...

கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும்
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும்
உள்ளங்கையில் அவளை வச்சி
உயர பறந்து தாண்ட வேணும் ...

பேரன் பேத்தி எடுத்த வயசுல
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய
உற்சாகமா காதல் செய்யணும் ...

கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் ...

பேரக் குழந்தைங்க ஆளான பொறவும்
என் மாரு மேல தான் அவ தூங்கணும்
காலம் முடிஞ்சி போனதை கூட
தெரியாம தான் நாங்க போகணும் !...

உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் ...
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும்
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும் !...

கருத்துகள்

 1. Super..Arumaiyaana kavithai

  கால் வலி-னு ஒரு நாள்
  அவ என் காலடியில உக்காந்தா
  தோள் வலி-னு கூட பாக்காம
  குழந்தையா அவளை சுமக்கனும் ... I liked this line...

  பதிலளிநீக்கு
 2. Prem un kavithaila kramathu nadaium un manasikkula un manavikku nee varanthirikkira un kathalum arumai :)

  பதிலளிநீக்கு
 3. கண்களில் கண்ணீரையும் , நெஞ்சிலே சுமையையும் இறக்கிவைத்த பிரமை !
  நான் படித்த கவிதைகளில் இது ஓர் சிறந்த கவிதை ! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நண்பா! தாங்கள் முகவரியை மாற்றிவிட்டதால் தமிழ்மணத்துல ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய முகவரியை தமிழ்மணத்தில் சமர்ப்பிக்கவும்.

  பதிலளிநீக்கு
 5. prem its really amazing prem.. i never thought u wud write like dis... ammmmaazinggg... brilliant....

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை வாழ்த்துக்கள்....
  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ...........

  பதிலளிநீக்கு
 7. காமம் முழுசும் கரைஞ்சி போய்
  காதல் மட்டும் மிச்சம் இருக்குற
  அந்த ஒத்த முத்தத்துல
  ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
  நான் பாடணும் ...

  I like this lines

  பதிலளிநீக்கு
 8. நீங்க இங்க இ௫க்க வேண்டிய ஆளே இல்ல சார்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

திருநங்கைகள் உலகம் - புத்தகவிமர்சனம்