இடுகைகள்

July, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவுணர்த்திய தேவதைக்கு !..

உலகத்தின் மறுபக்கம் நீ இருந்தாலும்
உன் இதயத்தின் ஒருப்பக்கம் நான் இருப்பேனே !...
கடல்கள் பல நீ கடந்து சென்றாலும்
கனவினில் இருவரும் கலந்திருப்போமே !...

காணும் பெண்ணெல்லாம் உன் போல தோன்ற
காண்பவை நிஜமாக நான் அங்கு வேண்ட
கண்ணில் பிழையோ, காட்சிப் பிழையோ
கண்மணி உன்னால் காதல் மழையோ !...

இரவின் தனிமையை நினைவுகள் வதைக்க
இமைகள் இணைந்தாலும் நீயங்கு இனிக்க
கைப்பிடித்த நினைவுகள் கனவினில் மிதக்க
கண் பனித்த துளிகள் தலையணை நனைக்க ...

சேலைகளை அழகாக்கும்
நந்தவனச் சோலையே !...
செந்தமிழ்நாட்டில் எனை விட்டு
சென்றதென்ன மேலையிலே !...

கவிதைத் தாயின் மடியிலே
கண்ணன் தேடிய பூங்குழலே
புன்னகை பூத்து உனை வெல்ல
பூக்களும் இல்லை பூமியிலே !...

உன் தேகம் வீசும் வியர்வை வாசம் !
உன் கண்கள் கனிவுடன் பேசும் நேசம் !
என் ஊனுடன் உயிர் கலந்திருக்கும் வரை
ஒவ்வொரு நொடியும் தேடும் உன் ஸ்பரிசம்!...

நட்புடன் சிரித்து, மகிழ்ந்த பொழுதுகள் ...
கவலையை பகிர்ந்து, நெகிழ்ந்த நிமிடங்கள் ...
ஒரு துளி ரகசியம் ஏதுமின்றி
மனதை இருவரும் திறந்த தருணங்கள் ...

மீண்டும் வேண்டும் கண்மணியே!

நியான் நகரம் - விமர்சனம்

"வீழ்வது இழிவாகா !... வீழ்ந்து கிடப்பதே இழிவு !..."

நியான் நகரம் - கதைக்கு இசை சேர்த்து புதுமை படைத்த "ரணம் சுகம்" வரிசையில், "பாதை" குழுவிடமிருந்து இன்னொரு படைப்பு. முந்தைய நாவலின் வெற்றியை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்திருகிறது. ஒரு உண்மை கதையின் தழுவல். விவரங்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

ரணம் சுகத்தில் இருந்து ஒரு சின்ன வித்தியாசம். நாவலின் முக்கியமான உரையாடல்களையும் பாடல்களுடன் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள். இது புக்கிசைக்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை. திரைப்படங்களை விட நாவல்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிவதற்கு முக்கிய காரணம் - படிப்பவர்கள் மனத்திரையில் விரிவது முழுவதும் அவர்களுடைய கற்பனை. அவர்கள் தான் அத்திரைப்படத்தின் இயக்குனர்கள். இங்கு பேச்சுக்கள் பதிவு செய்யப்படும் போது, அந்த கற்பனை தடைபடுகிறது.

வினய்-கும் சத்யனுக்கும் நடக்கும் உரையாடல் தான் நாவலின் முதல் பக்கம். பதிவு செய்யப்பட்ட பேச்சில் அந்த வீச்சு இல்லை. சத்யனின் பேச்சில் அந்த கம்பீரம், மிதப்பு இல்லை. மது-வுடன் நடக்கும் முக்கியமான உரையாடலில், வினய்-இன் பேச்சில் சரி…

மீண்டும் ஒரு மின்னல் !

உயிரின் உணர்வை தமிழில் கலந்து
வலியை மறந்து, இதயம் கடந்து
பறக்க துடித்தது சிறகற்ற பறவை
கவிதையில் புதைத்தது, தன் பெயரற்ற உறவை ...

என் ரணத்திற்கு மருந்தாகிய கவிதைகள்
உன் மனதிற்கு விருந்தாகிய தருணங்கள் !...
கவிதைகளை காதலிக்கும்
காதலின் புதுக்கவிதையே !...

முடிவுரைக்கு பின் முன்னுரையா ?
கல்லறையில் பூத்த மல்லிகையா ?
இறந்து போனது நான் இல்லையா ? - மீண்டும்
பிறக்க வைத்தது நீ இல்லையா ?

சிரித்து பேசி, சிறைகள் உடைத்தாய்
சிமிட்டும் விழியில், இதயம் துளைத்தாய்
கவிஞன் மனதில் கனவுகள் விதைத்தாய்
கவிதைகள் பாடி, சிறகுகள் கொடுத்தாய் !...

இரவின் மடியில் வெள்ளி முளைப்பதும்
காதல் விழியில் கவிதை பிறப்பதும்
ஆதாம் ஏவாள் அறிந்த செய்தி !...
விளங்க வைத்தாய் என்னுயிரில் ஓதி !...

மலர்கள் பேசும் மொழிகள் கேட்டு
மயக்கும் குயிலின் ராகம் போட்டு
உனக்கு சொல்வேன் தமிழில் பாட்டு
உயிரில் வெடிக்கும் காதல் வேட்டு !...

சிட்டுக்குருவியின் இறகுகள் தேடி
செய்து வைப்பேன் மஞ்சங்கள் கோடி
விடிய விடிய கவிதைகள் பாடி
என் இரவுகள் கூறும் நன்றிகள் கோடி !...

- கவிதைகளில் உயிர்த்திருக்கும் என் ரசிகைக்கு சமர்ப்பணம் !!!