இடுகைகள்

February, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினி பேரக் கேட்டாலே - புத்தகவிமர்சனம்

வழக்கமாக எந்த புத்தகம் படித்து முடித்தாலும், உடனே விமர்சனம் எழுதி விடுவேன். ஆனால் தலைவர் வாழ்க்கை வரலாறை படித்து மூன்று நாட்கள் ஆகியும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. எந்த நாவலும், எந்த திரைக்கதையும் என்னை இந்த அளவுக்கு கட்டி போட்டதில்லை. திருமதி. காயத்ரி ஸ்ரீகாந்த்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதனின் வாழ்க்கையை, உண்மையாக பதிவு செய்ததற்கு. இவரது கதை சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும், சிறு தொய்வு கூட இல்லாமல் சாமர்த்தியமாக எழுதியுள்ளார். கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து அருமையாக மாலை தொடுத்துள்ளார். கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம், அடுத்து நிகழ்காலத்தை பற்றி ஒரு அத்தியாயம், திரும்பவும் கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம் என கலக்கி உள்ளார். சினிமா தயாரிப்புக்கு தயாராக உள்ள திரைக்கதை போலவே இருக்கும், மொத்த புத்தகமும்.

சிவாஜிராவ் கெய்க்வாட் - ரஜினியின் இயற்பெயர். பெங்களூரில் அவர் பிறந்து வளர்ந்த கதை, ரௌடியாக திரிந்த இளங்கன்று பருவம், ஆன்மிகத்தில் தேடல் ஆரம்பித்த நேரங்…

பிஸினஸ் மகா மகா ராஜாக்கள் - புத்தகவிமர்சனம்

குமுதம் இதழில் "பிசினஸ் மகா மகா ராஜாக்கள்" என்ற தொடர் வெளிவந்து மக்களுடைய வரவேற்பை பெற்றது.ஒவ்வொரு வாரமும் ஒரு கோடீஸ்வரர் பற்றி ஆசிரியர் ரஞ்சன் எழுதுவார்.அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதித்தார், எப்படி சம்பாதித்தார், எந்த நிலையிலிருந்து ஆரம்பித்தார், என்னென்ன முயற்சிகள் செய்தார்,சந்தித்த முக்கியமான தோல்விகள் என அவர்களது பல வருட வாழ்க்கையை மூன்று பக்கங்களுக்குள் சொல்லிவிடுகிறார். 31 வாரங்கள் வெளிவந்த தொடர், இந்த புத்தகமாக 2004-ம் ஆண்டு வெளிவந்தது. இப்போது தான் என் கைக்கு வந்தது.

கர்சன்பாய் பட்டேல் முதல் வாரன் பப்பெட் வரை 31 செல்வந்தர்களின் முக்கிய குறிப்புகள் அடங்கிய இந்த புத்தகத்தில், ஒரு பெண் செல்வந்தர் கூட இடம் பெறவில்லை. கோடீஸ்வரிகள் உலகத்தில் இல்லையா அல்லது இந்த புத்தகத்தில் இருந்து தவிர்க்கப்பட்டர்களா?. இணையத்தில் தேடி பார்த்தேன். வின்பிரே ஒபரா (Oprah Winfrey) தவிர பேர் சொல்லும்படி புகழ் பெற்றவர்கள் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பேர். ஒரு புள்ளிவிவரம், பெண் செல்வந்தர்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தில் 40% அதிகரித்து இருபதாக சொல்கிறது. ரொம்ப சந்தோசம்.

லாட்டரி, புதையல்…