இடுகைகள்

January, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெயில் தின்ற மழை - புத்தகவிமர்சனம்

நிலாரசிகனுடைய கவிதைகளை அவ்வபோது இணையதளங்களில் படித்து இருக்கிறேன். "காதல்" பற்றிய கவிதைகள் மிக அருமையாக இருக்கும். தற்போது கணினி துறையில் வேலை செய்யும் இவரது நான்காவது புத்தகம் "வெயில் தின்ற மழை". நிலாரசிகனை நான் படித்த முதல் புத்தகம். நான் படிக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது கவிதை தொகுப்பு இது.

வழக்கமாக கவிதை புத்தகங்களை படித்து முடித்தவுடன், என் மனதில் கவிதைகள் மூன்று பிரிவுகளில் சென்று பதியும்.

௧. மிகவும் பிடித்தவை
௨. சுமாரானவை
௩. இதையெல்லாம் யார் கவிதை புத்தகத்தில் சேர்த்தது?

அனால், நிலாரசிகனின் நவீன கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" சற்று வித்தியாசமாக இருந்தது.
௧. புரிந்தது
௨. புரியாதது

புரிந்தவை அனைத்தும் பிடித்து போனது. புரியாதவை புதிராய் போனது. சின்னச் சின்ன கவிதைகள் எழுதி, நானும் கவிஞன் என்று நினைத்து பெருமை கொண்டிருந்த என்னை யோசிக்க வைத்துள்ளது. மற்றவர் கவிதையை படித்து, அதன் கருத்தை முழுமையாய் உள்வாங்கி அனுபவிக்க தெரியும் போது தான் ரசிகன் முழுமை பெறுகிறானா? அல்லது, செந்தமிழ் சொற்கள் மீதேறி அவனையும் அறியாமல், ரசிகனுடைய இதயத்தில் சிம்மாசனமிட்டு அ…

தண்ணீர் தேசம் - புத்தகவிமர்சனம்

தண்ணீர் தேசம் - தமிழில் ஒரு விஞ்ஞான காவியம். வடித்தது முனைவர் பொன்மணி வைரமுத்து. தமிழில் என்னென்ன உண்டு என்று கர்வப்பட்டு முடித்த வேளையில், தமிழில் என்னென்ன இல்லை என்பதை கணக்கு பார்க்க வேண்டி, வைரமுத்து தமிழுக்கு செய்த தொண்டு தான் இந்த புத்தகம். அகத்தையும் அழகையும் மட்டும் பாடி வந்த தமிழரை, அறிவியல் பக்கமும் திசைதிருப்ப ஒரு சிறு முயற்சி.சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே, நிலைத்து வாழும் என்பது பரிணாமத்தின் விதி. மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி. பொய்யென்று தெரிந்தும், பெருமைக்காக இன்னமும் உயிர்த்திருக்கும் சொல்வழக்கு. முழுமையான வரிவடிவத்தாலும், பண்பட்ட இலக்கியத்தாலும் வளர்ந்து வந்த தமிழ், விஞ்ஞான சிறகடித்து பறக்க வேண்டிய நேரம். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழுடன் விஞ்ஞானத் தமிழும் கைகோர்த்து நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முதற்சுழி இட்டு இருக்கிறார் வைரமுத்து.

கடல் - கதையின் கரு. கதையின் நாயகன் கலைவண்ணன். தொன்று தொட்டு வரும் கதாநாயகர்கள் போல் புரட்சிக்காரன், பத்திரிகை ஆசிரியன். நாயகி தமிழ். ப…