இடுகைகள்

October, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருவாச்சி காவியம் - புத்தகவிமர்சனம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்','கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

புத்தகத்தின் பின்னட்டையில் வைரமுத்துவின் வரிகளை படித்தவுடன், கர்வமோ, போதையோ தலைக்கேறிய சமயத்தில் எழுதி இருப்பாரோ என்று நினைத்தேன். அவர் படைப்பை அவரே புகழ்வது சிறுபிள்ளைதனமாக தோன்றியது. புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தொடவே இல்லை. தற்செயலாக எடுத்து படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை கீழே வைக்கவில்லை. படித்து முடிக்கும் போது, அதிகாலை மூன்று மணி. புத்தகத்தின் கடைசி பக்கத்துக்கு வந்தபோது, வைரவார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

வைரமுத்து சிறுவனாக இருந்தபோது கண்டு,கேட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்த காவியம். வையைநதிக்கரையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கிற பல பெண்களின் வாழ்க்கை தான் கருவாச்சி என்கிற கதாபாத்திரம். தேனி மாவட்டத்துல இருக்குற சொக்கத்தேவன்பட்டி என்கிற கிராமம் தான் கதைக்களம். கல்யாணமான ஆறாவது நாளே, அத்துவிட சொல்ல…