ரணம் சுகம் - a musical novelette

"காயம் தந்த முட்களுக்கு நன்றி"

முதல் பார்வையிலே மூச்சடைக்க வைக்கும், என் தேவதையை நினைவுப்படுத்தியது - நாவலின் முன்னுரை. படிக்கும் முன்னே, மனதினுள் போராட்டம். படிக்கலாமா? வேண்டாமா?... படித்தேன்...

சுமாரான வேகத்தில் தொடங்குகிறது கதை. கல்லூரி நாட்களின் கவிதைகளை இன்னும் அழகாக பதிவு செய்திருக்கலாம். ஒவ்வொரு பகுதியின் முடிவிலும், ஒரு பாடல்.

"பச்சை நரம்புக்குள் பாதரசம் ஏனோ?" - முதல் பாடல். ஆழியில் முத்தெடுத்த அனுபவம். இளங்கன்றின் துள்ளல். எனையறியாமல் புன்னகை பூத்த உதடுகள். முதல் மழையின் முதல் துளி. அருமை !.

படித்துகொண்டிருக்கும் போது மனதில் பெருங்குழப்பம்... இது நாவலில் கவிதையா?.. கவிதையில் நாவலா?.. இயற்றமிழ் கவிதை போல் இயல்பாய், ஒற்றை தாமரை போல் அழகாய், ஒரு தலை காதல். ஆண்களுக்கே உண்டான சாபக்கேடு !. நம் நாயகன் விலக்கல்ல...

இசைஞானியின் இசையில் கேட்டு மகிழ்ந்த பாரதியின் பாடல்கள், இவர்கள் இசையில் எடுபடவில்லை.(என் தனிப்பட்ட கருத்து. உங்களுக்கு பிடிக்கலாம்). வழக்கமான கல்லூரி நாட்களும், போட்டிகளும், தயாரிப்புகளும், விடுதிகளும், கொண்டாட்டங்களும்-என நகர்கிறது கதை.

முத்தம்.சில்லென்று சிலிர்க்க வைத்தது. நட்பை சிதைக்க வைத்தது. முடிவு?... நாயகன் பார்வையில் ரணம். நாயகி பார்வையில்?... வார்த்தையால் விவரிக்க முடியாதென்பதால், விவரிக்காமலே விட்டுவிட்டார்கள். சுனாமியில் சிக்கிய சுறாவுக்கும், காதல் கொண்ட பெண்ணுக்கும் - என்ன வித்தியாசம்?. சுறா தனக்காக போராடும். பெண் கடலுக்காக போராடுவாள். விந்தை ஜீவன்கள் - பெண்கள்.

"நட்பும் விலகிவிட்டது. காதலும் விலகிவிட்டது.முன்னது இன்னும் வலித்தது." - முந்நூறு முறை படித்துவிட்டேன். நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பறக்க தயாராகுங்கள். கண்கள் பனிக்க தயாராகுங்கள்.
சிரிக்க தயாராகுங்கள். சிலமுறை, சிதைய தயாராகுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?