மதுரைக்கு போறேனடி !...

மதுரைக்கு போறேனடி - என்
மாமன்கிட்ட பொண்ணு கேட்க ...
அம்மன் கோயில் சாட்சியோட
சீதனமா உன்னை கேட்க !..

ஆயிரங்கால் மண்டபமும்
சாயுங்கால சூரியனும்
வீசுகின்ற தென்றலோடு
பேசுகின்ற மல்லிகையும்
வாழ்கின்ற மதுரையில
வாழ்ந்து வந்த தேவதையை,
கொண்டு போக வரம் கேட்பேன் ...
உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன் !...

தூங்காத இரவுகளும்
பொங்கி வரும் கனவுகளும்
பேசாத வார்த்தைகளும்
புரியாத அர்த்தங்களும்
கேட்காமலே கொடுத்தவ நீ ...
கொடுத்தவளை கேட்க போகிறேன் !...

நீ போட்ட கோலம் போல
பூப்போட்ட தாவணியில்
அழகழகா சிரிச்சிக்கிட்டு
என் உசுர பறிச்சிக்கிட்டு
நீ பண்ண கொடுமையெல்லாம்
சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட !..

ஜல்லிக்கட்டு காளையை போல்
துள்ளிக்கிட்டு திரிஞ்சாலும்
கண்ணுக்குட்டி உன்னை விட்டு
தள்ளி தள்ளி நிக்குறது
மாமன் சொல்லும் சொல்லுக்காக !...
தமிழ்மதுரை மண்ணுக்காக !...

பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி
பத்திரமா பாத்தாலும்
பத்திக்கிட்டு போகுமின்னு
பக்குவமா சொல்ல போறேன் !..

நெஞ்சுக்குள்ள ஓடி வந்து
கொஞ்சி விட்டு போனவள
சொந்தம் பேச வர போறேன் ...
சொந்தக்காரன் ஆகப் போறேன் !..

கருத்துகள்

 1. One feather cap on your cap!! You should send your poems to tamil magazines.. You have a bright future as a poet buddy!!

  3 Cheers.. So far this one is "The Best"!!

  பதிலளிநீக்கு
 2. மதுரை மாநகரம் உங்களை அன்பொடு அழகிறது... மால மாளவெண வாரீர் வாரீர் வாரீர்... வணக்கம் வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 3. Prem - seems u r in the interval of VTV?? Best of luck, but adivanka unn friend kutikitu poo..Let it be a Telugu climax, I am sure the Jesus will help u 

  பதிலளிநீக்கு
 4. மதுரைக்கு போறேனடி - என் (வாரேண‌டி)
  ....
  சீதனமா உன்னை கேட்க !..

  ஆயிரங்கால் மண்டபமும்
  ...
  உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன் !... (நிதம்)

  தூங்காத இரவுகளும்
  ....
  கேட்காமலே கொடுத்தவ நீ ... (கெடுத்த‌வ‌ளே)
  கொடுத்தவளை கேட்க போகிறேன் !... (கெடுத்த‌வ‌ளைக்)

  நீ போட்ட கோலம் போல
  .....
  நீ பண்ண கொடுமையெல்லாம் (ப‌ண்ற‌)
  சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட !..

  ஜல்லிக்கட்டு காளையை போல்
  !...
  தமிழ்மதுரை மண்ணுக்காக !... (பொண்ணுக்காக‌)

  பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி
  பத்திரமா பாத்தாலும்
  பத்திக்கிட்டு போகுமின்னு (ப‌த்திக்கிட‌ப்)
  பக்குவமா சொல்ல போறேன் !..

  காத‌ல் கொண்ட‌ அன‌வ‌ரும் அனுப‌விக்கும் க‌விதை.
  (என் விழியில் உறுத்திய‌தை சிறு உழியால் செதுக்கி.)
  நக்கீர‌னாய் அல்ல‌, ந‌ண்ப‌னாய்....

  பதிலளிநீக்கு
 5. நன்றி வாசன் !!!... அடுத்த கவிதைகளில் திருத்தி கொள்கிறேன் :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?