ஏனடி அழைத்தாய் ?

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் !

கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக !

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய் ...
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய் !..

துடிக்கும் போது இனிக்கும் ...
இனிக்கும் போது வலிக்கும் ...
வலிக்கும் போது சிரிக்கும் ...
விந்தையை நீ அறிவாயோ ?

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ?

காதலன் கொஞ்சுகையில்
காதல் மனம் கெஞ்சுமோ ?
இயற்கையின் விதி புரியாதோ ?
காதலின் சதி தெரியாதோ ?

பேதை பெண்ணே !
நான் காதலிப்பது
எனக்காக அல்ல
நமக்காக !...

இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம் !...
இதற்காகவா அழைத்தாய் ?
எனை இதற்காகவா அழைத்தாய் ?

ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !..

உலகத்தின் உச்சியில் உன் பெயரை
உரக்க சொல்ல வேண்டும் !
விரகத்தின் உச்சியில் எனை நீ
கட்டியணைத்து கொள்ள வேண்டும் !

இதிகாச காதல்கள் நம்முன்
மண்டியிட வேண்டும் !
புதிதாக காதல்கள் நாம்
கண்டு உணர வேண்டும் !...

நீ 'உம்' எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !

உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!!

கருத்துகள்

 1. Prem.. really really tell us who the girls.... did u show ur poems to her :) ..

  பதிலளிநீக்கு
 2. dei.. unmaya sollu.. ethathu book-a pathu copy adikriya illa romba naal-a ezhuthi podama irunthiya?

  பதிலளிநீக்கு
 3. Loved the 6th para..
  nice one...
  Ketukonga tamil music directors.. there s a budding poet amidst us !!

  பதிலளிநீக்கு
 4. /* என் கவிதை தடாகத்தில்
  அழகாய் பூத்திருந்தேன் !
  உன் பிம்பம் விழுமென
  நீராய் காத்திருந்தேன் ! */

  Beautiful!!

  பதிலளிநீக்கு
 5. /*கார்மேகம் சூழ்ந்ததென
  நெடுவனம் தான் வருந்துமோ ?
  பூந்தென்றல் வீசுதென
  பூக்களும் தான் புலம்புமோ ? */

  Powerful lines!! Excellent!! Initially, I thought, Puyal (Storm) would apt, instead of puthenral (breeze), but later reading multiple times, you are right mate!! Double Cheers!!

  பதிலளிநீக்கு
 6. /* உலகமே காத்திருக்கிறது
  புத்தம் புது
  காதலுக்காக !!! */

  This week, you need to present this poem to your Nayana thara!!

  பதிலளிநீக்கு
 7. நீ 'உம்' எனும் அக்கணம்
  உலகத்துக்கு
  புதியதோர் காதலர் தினம் !

  Machan ethu koncham over da.. You give me that giril no .. we will speak for you .. poratha patha ni kavitha paithiyam akiduva pola eruku????

  பதிலளிநீக்கு
 8. */"ஆழ பதிந்து விட்டாய்
  இனி மீள முடியாது !
  எனை இரண்டாய் பிளந்தாலும்
  உன் நினைவு அகலாது !.."/*

  கலக்கிடிங்க தலைவா, உண்மையான வரிகள், அத்தகைய அன்பை அனுபவித்தால் மட்டுமே இப்படி எல்லாம் சொல்ல முடியும்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?