வெண்ணிலா கபடி குழு - திரைவிமர்சனம்.

15 மார்ச் 2009

முகப்பு > தொகுப்புகள் > திரைவிமர்சனம்

நான் பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. என் முதல் விமர்சனம் இது.

“பருத்திவீரன்” படத்துக்கு பிறகு, ஒரு நல்ல மண் வாசனையுள்ள படம் பார்த்த சந்தோஷம். எல்லாமே பிடிச்சிருந்தது. படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு இயல்பான விறுவிறுப்பு இருந்தது.

பழனி பக்கத்துல இருக்குற கனகம்பட்டி கிராமத்துல நடக்குற கதை இது. உன்ன மாதிரி, என்ன மாதிரி, ஏழு பேரோட கதை தன் இந்த படம்… ஒரு போட்டியில கூட ஜெயிக்காத ஒரு கபடி குழு…. வெளியூர் போய் தோத்துட்டு, உள்ளூர்ல மானம் போக கூடாதுன்னு ஒரு மொக்க கபடி குழு-வ ஊர் திருவிழாவுக்கு கூப்புடறது இருந்து படம் சூடு புடிக்க ஆரம்பிக்குது. மொத்த கதையும் நான் இங்க சொல்லிட்டா, நீங்க படம் பாக்குறப்ப ஒரு விறுவிறுப்பு இருக்காது…அதனால நீங்க தியேட்டரில் போய் பாருங்க ;)

மொத்த படத்துலயும், எனக்கு ரொம்ப புடிச்சது நம்ம கதாநாயகி தான். அவ்ளோ அழகு.. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குறா. பேரு சரண்யா மோகன். இந்த படத்துல அவளோட பேர் என்னான்னு சொல்ல மாட்டாங்க..அது தேவையும் இல்ல. படத்தோட ஆரம்பத்துல வருவா… அப்பறமா கடைசியில வருவா… பெருசா நடிக்க ஒன்னும் வாய்ப்பு இல்ல… ஆனா குடுத்த வேலைய சரியா செய்திருக்கா…

அப்பறம் நம்ம கோச் நடிப்பு பிரமாதம். ரொம்ப நல்லா இருக்கு … கிஷோருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. படத்தோட பின்னணி இசை நல்லா இருந்தது… எல்லா பாட்டுமே அருமையா இருக்கு… ரொம்ப நாளைக்கு கேட்டுகிட்டே இருக்கலாம்… இசை அமைப்பாளர், செல்வகணேஷ்…. தமிழுக்கு இன்னும் ஒருத்தர் … இன்னும் நிறைய எதிர்பாக்கறோம் கணேஷ்…. பின்னுங்க … சரியா…

படத்துலயே நான் ரொம்ப நேரம் விழுந்து விழுந்து சிரிச்சது, அந்த பரோட்டா காமெடி தான் … இப்ப நெனைச்சாலும் சிரிப்பு வருது…

படத்தோட முடிவு பத்தி நிறைய சர்ச்சைகள்… ஆனா, எனக்கு படத்தோட முடிவு இயல்பா தெரியுது … நீங்களே பாத்துட்டு முடிவு பண்ணுங்க..

பி.கு.: www.onlycinema.com … நான் இங்க தான் படம் பாத்தேன்.

முகப்பு > தொகுப்புகள் > திரைவிமர்சனம்

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.