தேவதையே தேவதையே.

7 அக்டோபர் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன
என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன
காதோரம் உன் மூச்சுக்காற்று சூடேற்றும் வேகமென்ன
அணிதிரண்ட உன்பெண்மை அநியாயம் செய்வதென்ன !…

இதழோடு இதழ் சேர்த்து உணவை நான் ஊட்டுவேன்
மடிமீது தலைசாய்த்து தினமும் தாலாட்டுவேன்
நாவால் உன் மேனியில் ஓவியம் பல தீட்டுவேன்
வள்ளுவனின் மூன்றாம் பாலை துளித்துளியாய் ஊற்றுவேன் !…

அணைத்தவுடன் எரியும் அதிசயம் உன் தேகமோ
நினைத்தவுடன் உருகும் புதுசுகம் தான் மோகமோ
என் காதல் நரம்புகளில் சிறுத்தையின் வேகமோ
செங்காந்தள் பூச்சூடிய பெண்மேனி தாங்குமோ !…

பல கோடி மின்னல்கள் எனை வந்து தாக்குதடி
உன்னுயிரில் நான் இணையும் அந்தவொரு நொடியிலே !…
சில நூறு ஜென்மங்கள் நான் வாழ்ந்து முடிக்கிறேன்
மார்போடு நீ சிணுங்கும் நள்ளிரவு வேளையிலே !…

மன்மத வெள்ளம் உன்னிடம் செல்லும்
உன்னத நேரம் நம் விழியோரம்
மோகத்தின் பேய்மழை மூர்க்கமாய் பெய்தும்
முடிக்கின்ற வேளையில் சாரலாய் காதல் !…

தேவதையே… தேவதையே…
தேன் சுரக்கும் பூவிதழே…
உன் தாய் சுமந்த தேகமதை
நான் சுமக்கும் காலம் எது ?…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.