நிலவோடு நான் பேசும் நேரம்
காற்றில் உன் காதலின் ஈரம்
பனி பொழியும் நள்ளிரவின் நீளம்
கண் இமைக்கும் ஒருநொடியாய் மாறும்
நிலவும் முகிலும் இணையும் நேரம்
உடலும் உயிரும் உனையே தேடும்
குளிரும் இரவில், நிலவின் ஒளியில்
காமன் மொழியில் காதல் சொல்வேன்
இரவினில் கடலினில், அலைதொடும் கரையினில்
கார்மேக கூந்தலும் அசைந்தாடும் இசையினில்
கடல் சூழ்ந்த தீவென, எனை சூழ்ந்தாய் ஒருமுறை
சுழல் வீழ்ந்த மீனென, நான் வீழ்ந்தேன் முதல்முறை
மணலினில் மெத்தையும், மார்பினில் தத்தையும்
பெண்தேவை தானுணர்ந்த கைவிரல் வித்தையும்
நானறிந்து இசை மீட்ட, கொடியிடையில் தீ மூட்ட
என்தோளில் முகம் புதைத்து பற்காவியம் நீ தீட்ட
கடற்கரை மணல்நமக்கு, உடையென உருமாற
அச்சமும் கூச்சமும் எதிர்பதமாய் தடம்மாற
வெட்கத்தில் வெண்ணிலா மேகத்தில் மறைந்தோட
விண்மீன்கள் கூட்டமாய் நமைபார்த்து தலையாட்ட
கடலலை கால் தொட, உயிர் வரை நீ தொட
சிகரங்கள் நான் தொட, சிறகுகள் வான் தொட
இருவுயிர் இணைந்திட, இமைகளும் நனைந்திட
இனிக்கின்ற ஒருகலையை இயல்பாக நாமறிந்தோம் !...

8 மக்கள் கருத்துக்கள்:
இந்த கவிதையில அந்த நிலவு வெக்கபடுமா னு தெரியாது.. கண்டிப்பா அந்த பொண்ணு வெட்கப்படுவாங்க.. ரொம்ப அழகா இருக்கு பிரேம்..
alga iruku
நிலவு போலவே
கவிதையும்........
super prem,
nilavodu pesa villai kavithai paadukireekal.. nailavai pola kavithaiyum alaku..vaalththukkal
Thanks guys :)
அழகு.. கவிதை அழகு..!!
நன்றி தங்கம்பழனி !
கருத்துரையிடுக