Tuesday, August 09, 2011

தொண்ணூறு வயசுல !...


தொண்ணூறு வயசுல
தடி ஊணி நடக்கறப்ப கூட,
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் ...
என் பாட்ட அவ ரசிக்கணும் ...

கையோட கை சேர்த்து
மடி மேல தலை சாய்ச்சி,
அவ கண்ண பாக்கறப்ப
முப்பது வயசுல மொளைச்ச காதல்
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும் ...

காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் ...

சுருக்கம் விழுந்த கையால
இறுக்கமா அவளை புடிச்சி
நெருக்கமா பக்கம் வந்தாலும்
வெட்கத்துல அவ விலகி போகணும் ...

ஓரக்கண்ணால அவ வெட்கத்த
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு,
அந்த காதோர மச்சத்துக்கு
கம்பனா நான் மாறனும் ...

கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும்
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும்
உள்ளங்கையில் அவளை வச்சி
உயர பறந்து தாண்ட வேணும் ...

பேரன் பேத்தி எடுத்த வயசுல
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய
உற்சாகமா காதல் செய்யணும் ...

கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் ...

பேரக் குழந்தைங்க ஆளான பொறவும்
என் மாரு மேல தான் அவ தூங்கணும்
காலம் முடிஞ்சி போனதை கூட
தெரியாம தான் நாங்க போகணும் !...

உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் ...
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும்
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும் !...

19 மக்கள் கருத்துக்கள்:

Sangavi Ananda Kumar சொன்னது…

Romba azhaga iruku..

மதுரன் சொன்னது…

அருமையான கவிதை,... வாழ்த்துக்கள்

பிரபல இலங்கைப் பதிவருக்கும் நரேந்திரமோடிக்கும் தொடர்பு; திடுக்கிடும் ஆதாரம்

Premkumar Masilamani சொன்னது…

thanks Sangavi & Madhuran !!!

இலக்கியன் சொன்னது…

Super..Arumaiyaana kavithai

கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் ... I liked this line...

Sundar A(Ex-HCE) சொன்னது…

Prem un kavithaila kramathu nadaium un manasikkula un manavikku nee varanthirikkira un kathalum arumai :)

Kavi Tendral சொன்னது…

கண்களில் கண்ணீரையும் , நெஞ்சிலே சுமையையும் இறக்கிவைத்த பிரமை !
நான் படித்த கவிதைகளில் இது ஓர் சிறந்த கவிதை ! வாழ்த்துக்கள்!

Premkumar Masilamani சொன்னது…

Thanks Shanmuga, Sundar and Kavi Thendral... :)

Abdul Basith சொன்னது…

அனைத்து வரிகளும் அருமை நண்பா!

Abdul Basith சொன்னது…

நண்பா! தாங்கள் முகவரியை மாற்றிவிட்டதால் தமிழ்மணத்துல ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய முகவரியை தமிழ்மணத்தில் சமர்ப்பிக்கவும்.

Premkumar Masilamani சொன்னது…

Thanks a lot Basith... I changed the URL... I will submit to tamilmanan after 48 hrs :)

பெயரில்லா சொன்னது…

prem its really amazing prem.. i never thought u wud write like dis... ammmmaazinggg... brilliant....

பெயரில்லா சொன்னது…

dis is sam artist...

Premkumar Masilamani சொன்னது…

Thanks Sam... neram koodi vantha ellarum ipdi thaan ayiduvaanga :)

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான கவிதை வாழ்த்துக்கள்....
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ...........

Premkumar Masilamani சொன்னது…

nandri அம்பாளடியாள் :)

சி.பிரேம் குமார் சொன்னது…

wow what a lines brother super

Premkumar Masilamani சொன்னது…

Thanks Prem

Prithvi சொன்னது…

காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் ...

I like this lines

Premkumar Masilamani சொன்னது…

Thanks Prithvi :)

Related Posts Plugin for WordPress, Blogger...